வழிபாட்டுப் பலன்

பிரசவ நந்தி

இத்திருத்தலத்தில் வீற்றிருக்கும் அம்மன் நற்பிரசவம் நடந்திட அருள்புரிவாள். இங்குள்ள பிரசவ நந்தி எனும் சிறிய அசையும் நந்தியிடம் தங்கள் வேண்டுதல்களைக்கூறித் திசைமாற்றி வைக்கின்றனர். பக்தர்கள் சுகப்பிரசவம் முடிந்ததும் மறுதிசை மாற்றி வைத்து வழிபடுகின்றனர். பிரசவம் குறித்த பழங்காலச் சிற்பமும் கல்தூணில் செதுக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீ சக்கரம்

ஆதிசங்கரர் பூஜித்து நிர்மாணித்த ஸ்ரீ சக்கரம் இன்று அம்மன் சன்னிதியில் வீற்றிருக்கிறது. இச்சக்கரம் கோயிலின் சக்தியை உயர்த்துவதாகும் இதற்கு பூசை செய்தால் ஒருயாகம் செய்ததின் பலனைப் பக்தர்கள் பெறமுடியும்.

48 நாள் 48 அகல் விளக்கு

கோகிலாம்பிகையை வேண்டிக்கொண்டு 48 அகல் விளக்குகளில் இலுப்பை எண்ணெய்த் தீபம் ஏற்றி 48 நாட்களுக்குத் தொடர்ந்து வழிபட்டுவர, தாங்கள் வேண்டிய பிராத்தனை நிறைவேறுகிறது என்பது பல பக்தர்கள் கைமேல்கண்ட பலனாகும்.

பைரவர்

காசியில் இருப்பது போலவே இக்கோயிலிலும் பைரவர் தனது வாகனமான நாய் இல்லாமல் காட்சியளிக்கிறார் என்பதால் இக்கோயில் மிகமிகப் பழமையானது மட்டுமல்லாமல் முக்திதரும் தலமாகவும் விளங்குகிறது.

சூரியவழிபாடு

சூரியன் சுயம்பு வடிவ சிவனை வணங்கி வழிபட்டதாக வரலாறு விளக்குகின்றது. தனது வழிபாட்டிற்காக உதயம்பட்டு எனும் ஊரில் சூரியன் தங்கி இருந்தார் என்றும் அவ்வூர் பெயர் மருவி இன்று ஒதியம்பட்டு என்று அழைக்கபடுவதாகச் செய்திகள் உள்ளன. ஆண்டுதோறும் பங்குனி 9,10,11 ஆகிய நாட்களில் சூரியக்கதிர்கள் காலை நேரத்தில் சிவலிங்கதின் மீது விழுவதால் இக்காலத்தும் சூரியன் சிவனை வணங்கி வருகிறார்.

சூரிய பூஜை

பிரதி வருடம் பங்குனி மாதத்தில் 9,11 மற்றும் 19 தேதிகளில் சூரிய ஒளிகதிரானது இவ் வாலயத்தின் சுவாமி திருக்காமீஸ்வரர் மீது விழுகின்றது. சூரியபகவான் இவ்வாலயத்தின் சுவாமி திருக்காமீஸ்வரை வழிபடுகின்றார்

பகவான் நான்முகன் இவ்வாலயத்தின் சுவாமி ஸ்ரீ திருக்காமீஸ்வரரை வழிபடுதல்