கோ பூஜை

கோ என்றால் உலகம். உலகில் உள்ள சகல ஜீவன்களுக்கும் தனது பாலை எடுத்துத் தரும் தாய் போல் விளங்குவதால் தான் அதை கோமாதா என்று பதிவுடன் அழைக்கிறோம்.

இந்த சக்தி உடைய பசுவை பூஜை செய்வதால் நமக்குப்பேறுகளும் திருமகள் பார்வையும் தெய்வங்களின் ஆசியும் கிடைக்கும். கோமாதா பூஜையை வெள்ளிக்கிழமையில் செய்தால் துர்சக்திகள் வீட்டை நெருங்காது.

இத்திருக்காமீஸ்வரர் கோயிலில் பசுக்கள் மேற்கு வாயிலில் உள்ள பசுகொட்டாக்கள் அமைந்துள்ளது. அவ்விடத்தில் எண்ணிக்கையிலான பசுக்கள் உள்ளன.

பிரதி வெள்ளிகிழமை மற்றும் பிரதோஷ காலத்தில் இப் பசுக்களுக்கு அபிஷேகம் மற்றும் தீபராதனைகள் நடைபெறுகின்றன.