திருக்காமீஸ்வரர் திருத்தேர் திருவிழா

இத்திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் கோகிலாம்பாள் சமேத திருக்காமீஸ்வரருக்கு ஒவ்வெரு வருடமும் வைகாசி மாதம் வருட பிரம்மோற்ச்சவப் பெருவிழா ஆனது நடைபெறுகின்றது. அவ்விழாவின் ஒன்பதாம் நாள் அன்று திருத்தேர் விழா நடைபெறுகின்றது. இவ்விழாவானது புதுச்சேரி மாநிலத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாகும். இம்மாநிலத்திலையே பெரிய தேர் ஆனது இத்திருத்தலத்தின் தேர் ஆகும்.

இத்திருத்தேர் ஆனது 67 அடி உயரம் கொண்டது. இவ்விழாவின் போது புதுச்சேரி மாநில கவர்னர், மாநில முதல்வர், மற்றும் ஏனைய மத்திய மந்திரி , புதுவை சட்டமன்ற உறுப்பினர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துத் துவக்கி வைப்பது ஓவ்வொரு வருடமும் நடக்கின்ற நிகழ்ச்சியாகும்.

சிவனடியார்களின் தமிழர் இசை நிகழ்ச்சி தேருக்கு முன்பு சென்று. பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி, தேரை இழுத்துச் செல்கின்றனர்..இவ்விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு அரசியல் பிரமுகர்கள், செல்வந்தர்கள், நற்பணி மன்றத்தினர், மகளிர் சுய உதவிக்குழுவினர், தங்களின் வேண்டுதல் நிறை வேறுவதற்காகப் பக்தகோடிகள் எனப் பல்வேறு தரப்பினரால் அன்னதானம் வழங்கப்படுகின்றது.