சித்திரை 63-நாயன்மார்கள் பூஜை

இத்திருத்தலத்தில் எழுந்துஅருளி இருக்கும் ஸ்ரீ கோகிலாம்பிகை உடன் உறை திருக்காமீஸ்வரர் சன்னதியில் வருடம் தோறும் சித்திரை மாதத்தில் 63 நாயன்மார்கள் குருபூஜையானது நடை பெறுகின்றது. அன்றைய தினத்தில் மூலவர் சுவாமிக்கும் , அம்பாளுக்கும் விசேஷ அபிஷேகங்களும் , சிறப்பு ஆராதனைகளும் நடை பெறுகின்றன.

அதனைத் தொடர்ந்து உற்சவர் சந்திரசேகரருக்குப் பால், பஞ்சாமிர்தம், விபூதி, தேன் , இளநீர் போன்ற சிறப்பு அபிஷேகங்களும், 63-நாயன்மார்கள் மூல விக்கிரங்கள் மற்றும் உற்சவ விக்கிரங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

இத்தினத்தில் மூலவர், சந்திரசேகரர் , மூல 63- நாயன்மார்கள் மற்றும் உற்சவ 63-நாயன்மார்கள் அபிஷேக ஆராதனைகளுக்குப் பிறகு, மேல தாளங்கள், மற்றும் கைலாச வாத்தியங்கள் முழங்க சந்திர சேகரர் மற்றும் 63- உற்சவ நாயன்மார்கள் வீதியுலா புறப்பாடு நடைபெறுகின்றது.

இவ்விழாவில் , கைலாசவாத்தியங்கள், ஓதுவார்களின் தேவார பாடலகள் பாடிய வண்ணம் வீதியுலா நடைபெறுகின்றது.