முதல் கால யாக பூஜை
ஸ்ரீ காமீஸ்வரர் திருக்கோயில் பாலஸ்தாபன நிகழ்ச்சியில் 1-12-2012 அன்று காலை 7.00 மணியளவில் ஸ்ரீ லட்சுமி ஹோமம் மற்றும் ஸ்ரீ நவக்கிரக ஹோமம் நடைபெற்றது, அதனை தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் வாஸ்து சாந்தி, ப்ரவேச பலி, ம்ருத்ங்க்ரஹணம் அங்குரார்பணம், ரஷாபந்தனம், கும்பா அலங்காரம், கலாகர்ஷனம் முதல் கால யாக பூஜை பூரணாஹீதி தீபாராதனை மிகவும் சிறப்புடன் நடைபெற்றது.
இந்த முதல் கால யாக பூஜையில் புதுச்சேரி அரசு பொதுபணித்துறை திரு v..சத்தியமூர்த்தி (செயற்பொறியாளர், துணைத்தலைவர்) , கோயில் சிறப்பு அலுவலர் மற்றும் நிர்வாக அலுவலர் திரு நா.மனோகரன் அவர்கள் கலந்து கொண்டு மற்றும் பொதுமக்கள் முன்னிநிலையில் யாக பொருளுடன் திருகோயில் பிரகாரத்தை வலம் வந்து யாக சாலை அடைந்து , சிவாச்சரியர்கள் பூரண கும்ப அலங்காரம் செய்து யாகத்தினை துவக்கி, யாக குண்டத்தில் , யாக பொருள்கள், வஸ்திரம் சமர்பணம் செய்து முதல் கால யாக பூஜையை பூர்த்தி செய்தனர்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|