மார்கழி மாத ஸ்ரீ நடராஜர் பூஜை
பிரதி ஓவ்வொரு மார்கழி மாதமும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, ஆருத்திரா தரிசன முன் 9 நாட்களும் மற்றும் தரிசன நாள் வரை இத்திருத்தலத்தில் இருக்கும் ஸ்ரீ சிவகாமி சமேத நடராஜர் உற்சவர் பெருமானுக்குச் சிறப்பு அலங்காரம் நடைபெறுகின்றது. அத்தகைய அலங்காரங்கள் முறையே.
ஸ்ரீ கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர்
ஸ்ரீ மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர்
ஸ்ரீ சிவகாமி சமேத ஆடல்வல்லான்
ஸ்ரீ காமாட்சி சமேத ஏகம்பரநாதர்
ஸ்ரீ விசாலாட்சி சமேத விஸ்வநாதர்
ஸ்ரீ தேவி கன்னியாகுமரி சமேத கைலாசநாதர்
. ஸ்ரீ மயிலை கற்பகாம்பாள் சமேத மயிலை நாதர்
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர்.
ஸ்ரீ நாகை நீலாயதாட்சி காயரோகனர்
ஆருத்ரா தரிசனம்
மார்கழி ஆருத்ரா தரிசனம் அன்று ஆடல்வல்லான் சிவகாமி அம்பாளுடன் திருநடனம் புரிந்து வீதியூலா வருகிறார்.
சுவாமி ஸ்ரீ நடராஜர் அலங்கார 10 நாட்களில் மாணிக்க வாசக உற்சவப் பெருமான் ஸ்ரீ நடராஜர் சன்னதியில் திருவொம்பாவை பாடி வீதியூலா வருகின்றார்.
ஆண்டில் 6 முறை, ஸ்ரீ நடராஜப் பெருமானுக்குச் சிறப்பு அபிஷேகமும் நடைபெறும்.