ஸ்ரீ கோகிலாம்பிகை சமேத ஸ்ரீ திருகாமீஸ்வரர் ஆலய பாலஸ்தாபனம்
மிகவும் பழமை வாய்ந்த இத்திருத்தலத்தில், பிரம்மா,இந்திரன், சந்திரன், மன்மதன் முதலிய தேவர்கள் சிவலிங்க பூஜை செய்தார்கள் , இச்சிறப்பு வாய்ந்த ஸ்ரீ திருகாமீஸ்வரர் திருக்கோயில்லானது பதினொன்றாம் நூற்றாண்டில் தரும பால சோழமன்னரால் ஆலயமும், நகரமும் நிர்மானிக்கப்பட்டது. இச்சிறப்பு வாய்ந்த கோயில் புதுவை மாநிலத்திலேயே பெரிய கோயில் என்று அழைக்கப்படுகின்றது. இத்திருக்கோயிலானது , புதுச்சேரி அரசுக்கு உட்பட்ட புதுவை இந்துஅறநிலைய துறைக்கு உட்பட்டது. இத்தகைய பழமைவாய்ந்த இத்திருத்தலத்திற்க்கு ஆலய திருப்பணி நடக்க இருப்பதை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள பரிவார மூர்த்திகள் மற்றும் அனைத்து விமானங்கள் அனைத்து கோபுரங்களுக்கும் சென்றவருடம் (2012) கார்த்திகை மாதம் 18 ஆம் தேதி (3-12-2012) திங்கட்கிழமை பூச நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினம் காலை 9.00 மணிக்குமேல் 10.30 மணிக்குள் மகர லக்னத்தில் பாலஸ்தாபனம்- திருப்பணி துவக்க விழா நடைபெற்றது.
பாலஸ்தாபன நிகழ்ச்சி நடைபெற்ற விபரங்கள்
தமிழ்தேதி | ஆங்கில தேதி | நேரம்/கிழமை | நிகழ்ச்சி நிரல் |
---|---|---|---|
கார்த்திகை 15 | 30-11-2012 | வெள்ளி காலை 6.00 மணிக்கு |
தேவதானுக்ஞை ஸ்ரீ வாஞ்ச்சா கல்ப கணபதி ஹோமம் |
காலை 9.00 மணிக்கு | பாசுபதா அஸ்த்தரயாகம் | ||
கார்த்திகை 16 | 1-12-2012 | சனி காலை 7.00 மணிக்கு | ஸ்ரீ லட்சுமி ஹோமம், ஸ்ரீ நவக்கிரஹ ஹோமம் |
மாலை 4.30 மணிக்கு |
வாஸ்து சாந்தி, ப்ரவேச பலி, ம்ருத்ங்க்ரஹணம் அங்குரார்பணம், ரஷாபந்தனம், கும்பா அலங்காரம், கலாகர்ஷனம் முதல் கால யாக பூஜை பூரணாஹீதி தீபாராதனை. |
||
கார்த்திகை 17 | 2-12-2012 | ஞாயிறு காலை 9.00 மணிக்கு |
இரண்டாவது கால யாக பூஜை பூரணாஹீதி தீபாராதனை |
மாலை 6.00 மணிக்கு |
மூன்றாவது கால யாக பூஜை பூரணாஹீதி தீபாராதனை |
||
கார்த்திகை 18 | 3-12-2012 |
திங்கள் காலை 6.00 மணிக்கு 9.00 மணிக்கு 9.15 மணிக்கு 9.30 மணிக்கு 9.45 மணிக்கு 10.00 மணிக்கு |
நான்காவது கால யாக பூஜை மகா பூரணாஹீதி, யாத்ரா தானம், தீபாராதனை யாத்ரா தானம் கடம் புறப்பாடு பாலஸ்தாபனம், அபிஷேகம், தீபாராதனை பூமி பூஜை |