Skip to main content area
TamilEnglish

jghj

  • முகப்பு
  • தலவரலாறு
    • புராண வரலாறு
    • தலச்சிறப்பு
    • தல மகிமை
  • தலஅமைப்பு
    • வில்லியனூர்
    • கோயில் அமைப்பு
    • கோயில் வடிவமைப்பு(சோழர் காலம்)
  • வழிபாடு
    • வழிபாட்டு பலன்
    • நித்திய பூஜைகள்
    • சிறப்பு பூஜைகள்
  • விழாக்கள்
    • பிரமோற்சவம்(திருவிழா)
    • குருபூஜை (நாயன்மார்)
    • தேர்த் திருவிழா
    • மார்கழி விழா
  • திருப்பணி
    • திருப்பணி மதிப்பீடு
    • திருப்பணி குழு
    • பாலஸ்தாபன நிகழ்ச்சி
      • முதல் கால யாக பூஜை
      • இரண்டாவது கால யாக பூஜை
      • முன்றாவது நான்காவது கால யாக பூஜை
    • பூமி பூஜை
    • நன்கொடை
  • காமீசர்
    • நாளிதழ்
    • ஆலய நிகழ்வுகள்
    • வீடியோ
    • பாடல்கள்
    • சிறப்பு நாட்கள்
    • விமர்சனம்
  • தொடர்பு

 

                       திருவாசகம்Manikkavasagar-Thirukamisvarar temple

கொம்மை வரிமுலைக் கொம்பனையாள் கூறனுக்குச்    

செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக்கு

இம்மை தரும்பயன் இத்தனையும் ஈங்கொழிக்கும்

அம்மை குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.

 

பிறவிப்பயனும், பிறவிப்புண்ணியமும்  கிடைத்திட அருள் செய்வது சிவ ஆலயங்களை எழுப்புவது, சிவன் ஆலயங்களைப் புதுப்பித்தல் போன்றசெயல்களாகும், அவ்வாறே நம் தென் பாரதத்தையும் மற்றும் சில கடல் கடந்த நாட்டையும் ஆண்ட சோழ மன்னர்கள் , தங்களது குல தெய்வமான சிவபெருமானுக்குக் கோயில் எழுப்புவதைத்தனது குலத்தொழிலாகக் கொண்டு , ஊருக்கு ஒரு கோயில் எனத் தனது சோழமண்டலம் முழுவதும் சிவ ஆலயங்கள் எழுப்பித் தனது குலப்பெருமையையும், நீங்காப் புகழையும் கொண்டு சிவ புண்ணிய பிறவிப்பயன் அடைந்தார்கள். அவ்வாறே நாமும் நம் பிறவிப் பயனும் குலப் பெருமையும், செய்த பாவங்களில் இருந்து விடுபட சிவ ஆலயங்களை எழுப்பி நமது பிறவிப் பயனை அடைவேண்டும். அவ்வண்ணம் நாம் எல்லாம் மன்னர்கள் அல்லர் , அல்லது ஆட்சி செய்யும் மனிதர்களும் அல்லர் , பின் நாம் எப்படி சிவ ஆலயங்களை எழுப்பி இத்தகைய பயனை அடைவது? இவற்றிற்கான விடையானது இறைஅருளால் சிவ ஆலயம் கட்டப்படுதல் அல்லது இருக்கும் பழைய சிவ ஆலயங்களுக்குத் திருப்பணி செய்தல் போன்ற செயல்களைச் செய்யும் அறநிலையத்துறை அரசுடன் நம்மால் இயன்ற நிதி உதவி அளித்தாலே அவை சிவ ஆலயம் கட்டும் அல்லது செய்யும்  திருபணிக்குச் சென்றடையும். 

இத்தகைய பலரின் இயன்ற நிதி உதவியுடன் அரசும் சேர்ந்து செய்யும் திருப்பணியானது , நிதி ஈகின்ற அனைவருக்கும் சிவ ஆலய திருப்பணி அல்லது சிவ ஆலய உருவாக்கும் புண்ணியம் தாமாகவே சென்றடையும்.

அச் சோழமன்னர்களின் கீர்த்தி, பிறவிப்பயன், செய்த பாவத்தைப் போக்குதல் போன்றவை நம்மை வந்து அடையும்.

சிவ அன்பர்களும் பக்த கோடி மக்களும் இவ்ஆலயத் திருபணிக்கு நிதியுதவி அளித்து இந்தப் பழமையான திருக்கோவிலின் பெருமையை உலகிற்கு தெரியச் செய்து , அனைவரும் இத்தலத்தின் கோகிலாம்பிகை அம்பாள் மற்றும் காமீஸ்வரின் அருளைப் பெற்று வளம்பெறுவோம்.

திருப்பணிக்கு நன்கொடையளிப்பவர்கள் கீழ்க் கண்ட விபரத்திற்குக் காசோலையாகவே, செக் மூலமாகவோ , வங்கி பணபரிமாற்றம் மூலமாகவோ அளிக்கலாம்.

வரைவுகாசோலை / செக் 

Tதிருகோயில் திருப்பணி

கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் திருக்கோயில்,

வில்லியனூர்

புதுச்சேரி

வங்கி பணபரிமாற்றம்

யூகோ வங்கி , வில்லியனூர் கிளை

A/C NO: 04300110069417

 

நன்றி:

நா.மனேகரன்

சிறப்பு அலுவலர் மற்றும் நிர்வாக அலுவலர்,

அருள்தரும் கோகிலாம்பிகை உடனமர் திருக்காமீஸ்வரர் திருக்கோயில்,

வில்லியனூர்

புதுச்சேரி

Sri Kokilambigai Samedha Thirukamiswarar Devasthanam

Administration of Hindu Religious Institutions

Goverment of Puducherry